உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

பழம்பாசி கிராமத்தில் மக்கள் குறைகேள் சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பழம்பாசி கிராமத்தில் மக்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் தொடர்பிலான மக்கள் குறைகேள் சந்திப்பு ஒன்று நேற்று நண்பகல் பழம்பாசி கிராம அலுவலர் பிரிவில் இடம் பெற்றது.

குறித்த கிராம மக்கள் விவசாயம் மற்றும் கால்நடைகளை மையமாகக் கொண்ட கிராமம் ஆகையால் இங்கு பிரதானமாக கால்நடைகளுக்கான மேய்ச்சல் தரவைகள் இல்லாமை மற்றும் வயல் செய்கைகளை மேற்கொள்ளக் கூடிய அளவில் இங்கே குளங்கள் புனரமைக்கப்படாமல் இருக்கின்றன என பல்வேறு பிரைச்சினைகளை குறித்த சந்திப்பின் போது மக்கள் முன்வைத்துள்ளனர்.

இதற்கு பதிலளித்த வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி சாந்தி சிறிஸ்கந்தராசா உங்களது அனைத்து கோரிக்கைகளுக்கும் ஆன தீர்வுகளை உடனடியாக பெற்றுத் தர முடியாவிட்டாலும் படிப்படியாக ஒவ்வொரு விடயமாக என்னால் ஒதுக்கக்கூடிய நிதி ஒதுக்கீட்டின் மூலமாகவும் ஏனைய திட்டங்கள் ஊடாகவும் உங்களுடைய குறைகளை நிவர்த்தி செய்வதற்காக என்னாலான முழு முயற்சிகளையும் எடுப்பேன் என இதன்போது மக்களிடம் உறுதி அளித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க