சினிமா

கமலின் 16 வயதினிலே ரீமேக்-விக்ரமின் ஆசை!

கமல்ஹாசனின் தயாரிப்பில் ராஜேஷ் எம் செல்வா இயக்கத்தில் விக்ரம், அக்ஷரா ஹாசன் மற்றும் அபிஹாசன் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் கடாரம்.

இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் நடிகர் விக்ரம் பேசிய போது ‘தான் படிக்கும் காலங்களிலேயே தாம் பார்ப்பதற்கு தேர்ந்தெடுக்கும் படங்கள் கமலின் படங்களைத் தான் எனவும் அவரைப் பார்த்து தான் நடிக்க வந்ததாகவும்’ கூறியிருந்தார். அதுமட்டுமின்றி, “பதினாறு வயதினிலே” படத்தினை ரீமேக் செய்து அதில் சப்பாணி வேடத்தில் நடிக்க ஆசை என்றும் ஆனால் அது தன்னால் முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் ‘கடாரம்’ படத்தில் இன்னொரு ஹீரோவான அபி ஹாசன் நன்றாக நடித்திருப்பதாகவும், இசையமைப்பாளர் ஜிப்ரானின் இசை இப்படத்திற்கு அருமையாக அமைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அத்துடன் ரசிகர்கள் தான் ‘துருவ நட்சத்திரம்’ படத்தில் ஸ்டைலிஷாக இருப்பேன் என்று நினைக்கிறார்கள். ஆனால்,  இப்படத்தில் அதை விட ஸ்டைலாக இருப்பேன் என்றும் ‘கடாரம்’ படம் புதிய ரசிகர்களை கொண்டு வரும் என நம்புவதாகவும் தெரிவித்திருந்தார்.

கருத்து தெரிவிக்க