“ஶ்ரீலங்கா நிதஹஸ் பொதுஜன பெரமுன” என்ற கூட்டணி உருவாக உள்ளதாக ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆகிய இரண்டு கட்சிகளும் இணைந்து “ஶ்ரீலங்கா நிதஹஸ் பொதுஜன பெரமுன” என்ற கூட்டணி அமைக்க இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆகிய கட்சிகள் கூட்டணி அமைப்பது தொடர்பில் பேச்சுவார்த்தைகள் நடாத்தப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த இரண்டு கட்சிகளுக்கும் இடையில் இதுவரை 06 கட்ட பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளதாகவும் இதன்போது நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
கருத்து தெரிவிக்க