அமெரிக்கா- ஈரான் இடையே ஏற்பட்டிருக்கும் முறுகல் நிலையை அதிகப்படுத்தும் வகையில், ஈரானிய பாராளுமன்ற தேசிய பாதுகாப்பு தலைவரும், வெளியுறவுக் கொள்கை ஆணையத்தின் தலைவருமான மொஜ்தபா சொல்னோர், மிரட்டல் ஒன்றை விடுத்துள்ளார்.
அமெரிக்கா விதித்த தடைகளை மீறி எண்ணெய் வர்த்தகத்தை நடைமுறைப் படுத்த , ஈரான் போன்ற நாடுகள் உதவவில்லை என்றால் ஒப்பந்தப்படி அனுமதிக்கப்பட்ட செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை அதிகரிப்பதை தவிர வேறு வழி இல்லை என தெரிவித்திருந்தார். ஈரானின் இந்த அறிவித்தலை தொடர்ந்து, அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் “நெருப்புடன் விளையாட வேண்டாம் ” என எச்சரித்துள்ளார்.
மேலும் அவர் தனது டுவிட்டரில், ‘ புதிய அணுசக்தி ஒப்பந்தம் இல்லாவிட்டால் யுரேனியத்தை தாங்கள் விரும்பும் எந்த அளவுக்கும் அதிகப்படுத்துவோம்’ என அச்சுறுத்தி இருக்கிறார்கள். எனவே இவ்விடயம் தொடர்பில் எச்சரிக்கையாக இருக்கும்படி உலக நாடுகளை ட்ரம்ப் கேட்டுள்ளார்.
கருத்து தெரிவிக்க