பதிவாளர் நாயகம் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இன்று வியாழக்கிழமை முன்னிலையாகி சாட்சிங்கள் வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்டத்திலுள்ள பெரும்பாலான காணிகளைத் தமது உறவினர்கள் மற்றும் அவர்களின் நிறுவனங்களின் பெயர்களுக்கு மாற்றியதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
குறித்த குற்றச்சாட்டு தொடர்பில் வாக்குமூலங்களை பெற்றுக்கொள்ளும் வகையில் பதிவாளர் நாயகத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அந்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அத்துடன், இலங்கை காப்புறுதி ஒழுங்குமுறைப்படுத்தல் ஆணைக்குழுவின் பணிப்பாளரும் இன்று வியாழக்கிழமை ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகவுள்ளார்.
கல்வி அமைச்சினால் முன்னெடுக்கப்படும் சுரக்ஷா காப்புறுதித் திட்டத்தை மாணவர்களுக்கு வழங்குவதில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படும் நிதி மோசடி தொடர்பில் வாக்குமூலம் வழங்க அவர் அழைக்கப்பட்டுள்ளார்.
கருத்து தெரிவிக்க