சினிமா

அஜித்தை பாராட்டிய ஜோதிகா

அஜித்தின் நடிப்பில் உருவாகியுள்ள படமான நேர் கொண்ட பார்வை அடுத்த மாதம் வெளியாகவுள்ளது.

இந்தியின் பிங்க் ரீமேக்கான இப்படத்தில் அஜித், அமிதாப்பச்சன் நடித்த வேடத்தில் நடித்துள்ளார்.

அஜித்துடன் இப்படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத், பிக்பாஸ் அபிராமி என மூன்று கதாநாயகிகள் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

இந்நிலையில் இப்படத்தையும் அஜித்தையும் புகழ்ந்து நடிகை ஜோதிகா சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.

அவர் பேசுகையில், அஜித் சார், அவங்க நேர் கொண்ட பார்வை படம் பண்றாங்க. அவர் அப்படத்தில் நடித்ததற்காக நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

சுற்றி இருப்பவர்கள் மார்கெட்.. மார்கெட் என இருக்கும்போது, அவ்வளவு ரசிகர் பலத்தை வைத்துகொண்டு, விஸ்வாசம் போன்ற 100 கோடி ரூபாய் படங்களில் நடித்துவிட்டு இப்படியொரு சிறு பட்ஜெட் படத்தில் நடித்ததை பாராட்டுகிறேன் என கூறியுள்ளார்.

கருத்து தெரிவிக்க