ஊழல் மோசடி தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இன்று பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில சாட்சி வழங்கினார்.
2015 முதல் 2018 ஆண்டு காலப்பகுதியில் அரச நிறுவனங்களில் இடம்பெற்ற ஊழல் மோசடி தொடர்பில் தீனியாவல பாலித தேரர் முன்வைத்த முறைப்பாட்டுக்கமைய சாட்சிகள் வழங்கியுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் றிசாட் பதியூதீன் வெளிநாட்டு பிரஜைகளுக்கு போலி பிறப்பு சான்றிதழ்களை தயாரித்து வழங்கி அவர்களை வாக்காளர் பெயர் பட்டியலில் இணைக்க நடவடிக்கை எடுத்தமை தொடர்பில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.
இது குறித்த மேலதிக தகவல்களை பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பிலவிடம் பெற்று கொள்ளுமாறும் அவர் அந்த முறைப்பாட்டில் தெரிவித்திருந்தார்.
கருத்து தெரிவிக்க