சினிமா

காஜல் அகர்வாலும் ஹொலிவுட் படத்தில் நடிக்கிறார்!

காஜல் அகர்வாலும் ஹொலிவுட் படத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

முன்னணி ஹொலிவுட் இயக்குனர் இயக்கும் குறித்தத் திரைப்படம் ஆங்கிலம் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் திரைப்படத்துக்கான படப்பிடிப்பை விரைவில் தொடங்க திட்டமிட்டு உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நடிகர் தனுஷ் ‘த எக்ஸ்ட்ராடினரி ஜோர்னி ஒப் பகிர்’ என்ற வெளிநாட்டு படத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்தை தமிழில் பக்கிரி என்ற பெயரில் வெளியிட்டனர். நடிகர் நெப்போலியனும் ஹாலிவுட் படத்தில் நடிக்கிறார்.

ராதிகே ஆப்தேவும் ஆங்கில படத்தில் நடித்து இருக்கிறார். சுருதிஹாசனும் ஆங்கில தொடர் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க