உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பொறுப்பு உயர்மட்ட அரசியல் அதிகாரிகளில் இருந்து கீழ்மட்ட உறுப்பினர்கள் மீது சுமத்த முயற்சிக்கப்படுவதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
கண்டியில் வைத்து நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நாட்டில் இதுவரையில் ஏழை மக்களின் மீது சட்டம் சரியான முறையில் நிறைவேற்றப்பட்டதாகவும் பண பலம் உள்ளவர்கள் மீது சட்டம் நிறைவேற்றப்படுவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பொறுப்பை அரசாங்கமும் பிரதமரும் பொறுப்போற்க வேண்டிய நிலையில் அவர்கள் குற்றத்தை பொலிஸ்மா அதிபர் மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் மீது சுமத்த முயற்சிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பொலிஸ்மா அதிபர் மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளருக்கு நாட்டின் பாதுகாப்பு தொடர்பில் கடமை இருப்பினும் அதையும் விட அரசாங்கத்திற்கு கடமை இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கருத்து தெரிவிக்க