அரேபிய வளைகுடாவின் ஐக்கிய அரபு இராச்சியத்தில் உள்ள ஒரு நகரமான ஷாஜாவை மன்னர் சுல்தான் பின் முகம்மது அல் காசிமி ஆட்சி செய்து வருகிறார். இவரது மகன் ஷேக் காலித் பின் சுல்தான் அல் காசிமி (39), கடந்த 2008 இல் ‘காஸ்மி’ என்ற ஆண்கள் ஆடை நிறுவனம் ஒன்றை ஆரம்பித்தார். அதன் பிரதான வியாபார நிலையம் லண்டன் வெஸ்ட் மின்ஸ்டரில் உள்ள ஷோஹோவில் இயங்கி வருகிறது. இந்நிலையில் அவர் இறந்து விட்டதாக ஐக்கிய இராச்சியத்தின் ஆட்சியாளர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. அத்துடன் மூன்று நாட்கள் துக்கம் அனுஷ்டிக்கும் முகமாக , நாட்டில் கொடிகளை அரைக் கம்பத்தில் பறக்க விடுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது
ஷேக் காலித் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் சமூக வலைத்தளங்களில் அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.
அதேவேளை சுல்தான் பின் முகம்மதுவின் மூத்த மகன், ஷேக் முகமது பின் சுல்தான் அல் காசிமி , கெரோயின் போதைப் பொருளை அளவுக்கு அதிகமாக பாவித்ததால் 24 வயதில் 1999 இல் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஷேக் காலித்தின் உடலை ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு அனுப்புவது பற்றியும், இறுதி அஞ்சலிக்கான விபரங்கள் பற்றியும் பின்னர் அறிவிப்பதாக ஷாஜாவின் ஆட்சியாளர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கருத்து தெரிவிக்க