கொழும்பு – கோட்டைக்கும் மாலபேக்கும் இடையில் இலகு தொடரூந்து பாதை அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு சின்னமன் கிரான்ட் ஹோட்டலில் இது தொடர்பான நிகழ்வு பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட உள்ளது.
ஜப்பானின் நிதியுதவியுடன் அமைக்கப்படும் குறித்த இலகு தொடரூந்து பாதை 11 கிலோ மீற்றர்களைக் கொண்டதாக அமையவுள்ளது.
இதில் 16 தொடரூந்து தரிப்பு நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன.
நான்கு பெட்டிகளைக் கொண்ட இலகு தொடரூந்துகள் இந்தச் சேவையில் ஈடுபடவுள்ளன.
இதில் 800 பயணிகள் வரை பயணிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
குறித்த இலகு தொடரூந்து மாலபேயில் இருந்து கொழும்பு கோட்டை வரையிலான தனது பயணத்தை 30 நிமிடத்தில் நிறைவு செய்யும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வேலைத்திட்டத்தை எதிர்வரும் 2024ஆம் ஆண்டு பூர்த்தி செய்ய எதிர்பார்க்கப்படுகின்றது.
கருத்து தெரிவிக்க