அட்லீயின் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் பிகில் திரைப்படம் தீபாவளிக்கு வெளிவர இருப்பது குறிப்பிடத்தக்கது. இந் நிலையில், அடுத்தபடியாக மாநகரம் லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் நடிக்கும் விஜய், அதனைத் தொடர்ந்து ஷங்கரின் முதல்வன் 2 படத்தில் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. கமலை வைத்து இயக்கவிருந்த இந்தியன் 2 கிடப்பில் போடப்பட்டிருக்கும் நிலையில், அர்ஜீனை வைத்து ஷங்கர் இயக்கிய முதல்வன் படத்தின் இரண்டாம் பாகத்தில் விஜய்யை நடிக்க வைக்கப்போவதாகவும் அதனை ஷங்கர் இயக்கப்போவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதில் விஜய் முதல்வராக நடிப்பார் என்ற செய்தி ஒருபக்கமிருக்க, மற்றொரு பக்கம் நடிப்பாரா என்ற சந்தேகங்களும் எழுந்துள்ளன. ஏனெனில், சர்கார் படத்தின் கிளைமாக்சில் விஜய் முதல்வர் ஆவது போன்றே ஏ. ஆர். முருகதாஸ் கதை பண்ணியிருந்ததாகவும் பின்னர் விஜய்க்கு தான் முதல்வராக நடிப்பதில் உடன்பாடு இல்லாததால் தான் அவர் வேறு நபரை முதல்வராக்குவது போன்று கிளைமாக்ஸ் காட்சிகள் எடுக்கப்பட்டிருந்தாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதுமட்டுமின்றி, ரஜனியும் கமலும் அரசியலுக்கு வந்துள்ள நிலையில் விஜய் முதல்வராக நடிப்பாரா என்பதும் கேள்விக்குறியாகவே உள்ளது. ஆக முதல்வன் 2 படத்தில் விஜய் முதல்வராக நடிப்பாரா? இல்லையா? என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
கருத்து தெரிவிக்க