விளையாட்டு செய்திகள்

இங்கிலாந்தின் அரையிறுதிக் கனவு நிஜமாகுமா..?

இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடயிலான இறுதி லீக் போட்டி இன்று புதன்கிழமை ரிவெர் சைட் மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

இங்கிலாந்து அணிக்கு இயன் மோகனும் நியூசிலாந்து அணிக்கு கேன் வில்லியம்ஸ்சனும் தலைமை தாங்கவுள்ளனர்.

நியூசிலாந்து அணியைப் பொறுத்த வரையில் ஏற்கனவே அரையிறுதிக்கான தகுதியைப் பெற்றுள்ளது.

இங்கிலாந்து அணியைப் பொறுத்த வரையில் இந்த இறுதிப் போட்டியில் வெற்றிப் பெற்றால் மாத்திரம் அரையிறுதிக்கான தகுதியை பெறும் என்ற நிலை காணப்படுகின்றது.

இதன்படி, இன்றைய போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றிபெற போராடும் என இரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

 

கருத்து தெரிவிக்க