உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்புதியவை

தீ விபத்தில் லொறி ஒன்று எரிந்து நாசம்

சிலாபம், மாதம்பை பழைய நகரிலுள்ள வர்த்தக நிலையமொன்றில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீயில் 3 லொறிகள் எரிந்து நாசமாகியுள்ளன.

ஒரு லொறி முழுமையாக தீயில் எரிந்து நாசமாகியுள்ளதோடு, 02 லொறிகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

பழைய இரும்பு பொருட்களை சேகரிக்கும் வர்த்தக நிலையத்திலேயே தீ விபத்து இடம்பெற்றுள்ளது.

பரவிய தீயை பொலிஸாரும் பிரதேசவாசிகளும் இணைந்து கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.

கருத்து தெரிவிக்க