சினிமா

ஹொலிவுட்டில் கால் பதிக்கும் காஜல் அகர்வால்!

தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தியில் நடித்துக் கொண்டிருந்த காஜல் தற்போது ஹொலிவுட்டில் நடிக்கவுள்ளார். தெலுங்கு நடிகர் மோகன் பாபுவின் மகன் விஷ்ணு மஞ்சு, ஹொலிவுட் மற்றும் தெலுங்கில் ஒரு படத்தை தயாரித்து நடிக்கிறார். மிகப் பெரும் பட்ஜெட்டில் தயாராகும் இந்தப் படத்தை ஹொலிவுட் இயக்குனர் ஒருவர் இயக்க கதாநாயகியாக காஜல் நடிக்கவுள்ளார். மேலும், இப்படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு வேலைகள் அமெரிக்காவில் நடைபெறவுள்ளது ம் குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி, இப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் வகையில் தயாரிக்கப்படவுள்ளது.

காஜல், கமலின் இந்தியன் 2 படத்தை நிறையவே எதிர்ப்பார்த்திருந்தார். அதன் படப்பிடிப்புக்கள் எப்போது தொடங்கும் என்றே தெரியாத நிலையில், அப்படத்தை நம்பியிருக்காமல் அடுத்தகட்ட வேலைகளில் இறங்கிவிட்டார். அந்த வகையில் தமிழில் ஜெயம் ரவியுடன் கோமாளி படத்தில் ஜோடி சேர்ந்திருக்கிறார். மேலும், ஒரு சில தெலுங்கு படங்களிலும் நடிக்கிறார். அதனைத் தொடர்ந்து ஹொலிவுட் படத்தில் நடிக்கவுள்ளார் காஜல் அகர்வால்.

கருத்து தெரிவிக்க