அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் டல்லாஸ் விமான நிலையத்தில் இருந்து புளோரிடா நோக்கி புறப்பட்ட தனியாருக்கு சொந்தமான சிறிய விமானம் ஒன்று, கட்டிடத்தில் மோதி விபத்துக்குள்ளானது. விமானத்தில் 8 பயணிகளும் 2 விமானிகளும் பயணித்தனர்.
விமானம் ஓடு பாதையில் இருந்து மேல் நோக்கி பறக்க முற்பட்ட போது திடீரென என்ஜின் பழுதானது. 200 அடி உயரத்திற்கு மேல் பறக்க இயலாமல் தடுமாறிய விமானத்தை தரையிறக்க முற்பட்டபோது கட்டுப்பாட்டை இழந்த விமானம் , அருகில் உள்ள கட்டிடத்தில் மோதி தீப்பிடித்தது எரிந்தது. இந்த விபத்தில் விமானத்தில் இருந்த 10 பேரும் உயிரிழந்துள்ளனர். இவ்விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கருத்து தெரிவிக்க