அழகு / ஆரோக்கியம்

நிலவேம்பின் மருத்துவ குணங்கள்

நிலவேம்பு முழுத் தாவரமும் கசப்புச் சுவை கொண்டது. இதில் அதிகளவு மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளது.

நிலவேம்பு முழுத் தாவரத்தையும் அவித்து குடிநீராக அருந்தி வந்தால் மலச்சிக்கல், மயக்கம், காச்சல், போன்றவற்றை குணப்படுத்துவதோடு, மந்த குணத்தை போக்கி பசியைத் தூண்டும்.

இந்த குடிநீரை காலையும் மாலையும் ஒரு கிழமைக்கு பருகி வந்தால் உடம்பில் நோய் எதிர்ப்புச் சக்தியை தரும்.

அரை கப் குடிநீரை காலையும் மாலையும் மூன்று நாட்கள் தொடர்ந்து குடித்தால் கல்லீரல் சம்பந்தமான நோய்கள் குணமாகும்.

வயிற்றுப்புழுக்கள் வெளியேற நிலவேம்பு இலையை தூளாக்கி காலையில் சாப்பிட்டு வந்தால் புழுக்கள் வெளியேறி விடும்.

இந்த தூளை உடம்பில் பூசிக் குளித்தால் சொறி, சிரங்குகள் குணமாகும்.

நிலவேம்பு இலை குடிநீரை காலையும் மாலையும் ஒரு கிழமை பருகி வந்தால் இரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும்.

கருத்து தெரிவிக்க