தற்போது, ஜனாதிபதியுக்கும் நாடாளுமன்றத்துக்கும் இடையே சீரான சமநிலை நிலவுகிறது என அமைச்சர் பாட்டாலி சம்பிக ரணவக்க கூறியுள்ளார்.
கதிர்காமத்தில் இன்று காலை கண்காணிப்பு சுற்றுப்பயணத்தைத் மேற்கொண்ட நிலையில் அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.
அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தம் நாட்டில் ஜனநாயக மனித சுதந்திரத்திற்காக பெரும் சேவையைச் செய்துள்ளது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் ஜனாதிபதியின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டுள்ளதால், அது நாட்டிற்கு சாதகமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை அரசியலமைப்பின் 18 ஆவது மற்றும் 19 ஆவது திருத்தத்தை இரத்து செய்ய வேண்டும் எனவும் அது நாட்டை அழிவு பாதையில் கொண்டு சென்றுள்ளதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
கருத்து தெரிவிக்க