நேர்காணல்கள்புதியவைமுக்கிய செய்திகள்

சு.கவின் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்க தயார் – வெல்கம அதிரடி!

” ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை பலப்படுத்தும் வகையிலேயே இனிமேல்  என் அரசியல் பயணம் தொடரும்.” – என்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்தார்.

அவருடனான நேர்காணல் வருமாறு,

கேள்வி – ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பதுளை மாவட்ட அமைப்பாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளீர்களே……..?

பதில் – ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் கட்சி உறுப்புரிமையை நான் இன்னும் பெறவில்லை. ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலேயே அங்கம் வகிக்கின்றேன். எனவே, அங்கத்தவர் அல்லாத ஒருவரை எந்த அடிப்படையில் பதவி நீக்கம் செய்யமுடியும்?

கேள்வி – உள்ளாட்சி சபைத் தேர்தலின்போது பொதுஜன பெரமுனவுக்கு சார்பாக பதுளை மாவட்டத்தில் பரப்புரைகளில் ஈடுபட்டுள்ளீர்கள். அப்படியானால் எந்த அடிப்படையில் சுதந்திரக்கட்சி உறுப்பினர் என கூறுகின்றீர்கள்?

பதில் –  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் கொள்கை ரீதியில் ஏற்பட்டிருந்த முரண்பாடுகள் காரணமாகவே கூட்டு எதிரணிக்கு சார்பாக செயற்பட்டேன். அது மஹிந்த ராஜபக்சவுக்கு வழங்கிய தற்காலிக உதவியாகும்.

கேள்வி – கோட்டாபய ராஜபக்சவுக்கு பதிலாக வேறொரு வேட்பாளரை தாமரை மொட்டு களமிறக்கினால் அந்த வேட்பாளருக்கு ஆதரவு வழங்குவீர்களா?

பதில் –  கோட்டாபய ராஜபக்சவே போட்டியிடுவார் என எனக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு உடன்பட முடியாததாலேயே  எனது மனசாட்சியின் பிரகாரம் செயற்பட தீர்மானித்துள்ளேன். வேறு வேட்பாளர் களமிறங்கினால் அது குறித்து சிந்திக்கலாம்.

கேள்வி – உங்கள் எதிர்கால அரசியல் பயணம்………?

பதில் –  நான் சுதந்திரக்கட்சி உறுப்பினர். எனவே, பழைய அங்கத்தவர்களையும் இணைத்துக்கொண்டு முன்நோக்கி பயணிப்பேன்.

கேள்வி – ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கடுமையாக விமர்சித்துவிட்டு, மீண்டும் அவருடன் இணைய முடியுமா?

பதில் –   கட்சி தலைவர் என்பதற்காக எல்லா விடயங்களுக்கும் தலையாட்ட முடியாது. மனசாட்சியின் பிரகாரமே விமர்சனங்களை முன்வைத்தேன். மஹிந்தவுக்கு ஜனாதிபதியிடமிருந்து பிரதமர் பதவியை வாங்க முடியும் என்றால்,  என்னால் ஏன் இணைந்து செயற்படமுடியாத சூழ்நிலை ஏற்படும்?

கேள்வி –  ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்பை சுதந்திரக்கட்சி வழங்கினால் வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கை உள்ளதா?

பதில் –   நிச்சயமாக. மக்களின் ஆதரவு என்றும் எனக்கு இருக்கும். எனவே, மக்கள் ஆதரவு அலையை என்னால் திரட்ட முடியும் என்பதை உறுதியாக கூறிவைக்க விரும்புகின்றேன்.

 

 

 

 

 

 

 

 

 

 

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் வாங்கவில்லை. பிறகெப்படி நீக்க முடியும்? ஒத்துழைப்பு வழங்கினேன்.

கவலை இல்லை. நான் எப்படி கவலை அடைவது? சிறிசேனவுடனான பகைமை.

வேறுபட்டால் – கோட்டாபய வந்தால் யாராவது வந்தால் ஆதரவு வழங்க தயார்.

வருவதால்தான் எடுத்தேன். சுதந்திரக்கட்சி எனது கட்சி.

மனசாட்சியின் பிரகாரம் கதைக்கின்றேன். உரிமை எமக்கு இருக்கின்றது.

சிறிசேன தலைமைத்துவத்தை ஏற்கின்றேன். எதிர்காலத்தில் எடுக்கும் முடிவு. பிரித்தட.

சுதந்திரக்கட்சிக்கு வேலை செய்து. மஹிந்தவுடன் இணைந்து என்ன கதைக்கவேண்டும்?

போட்டியிடுவீர்களா?

 

கருத்து தெரிவிக்க