2019-வரவு செலவு திட்டத்தில் முன்மொழியப்பட்ட சம்பள உயர்வு மற்றும் கொடுப்பனவுகள் நாளை முதல் நடைமுறைக்கு வர உள்ளன.
இதன் மூலம் 1.1 மில்லியன் அரச ஊழியர்கள் ரூ .2500 இடைக்கால கொடுப்பனவு வழியே பயனடைவார்கள் என நிதி அமைச்சின் ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் பாதுகாப்பு பிரிவு கொடுப்பனவுகளின் அதிகரிப்பு, ஓய்வூதிய முரண்பாட்டுக்கான தீர்வு கொடுப்பனவு மற்றும் சிறப்புத் தேவைகளைக் கொண்ட நபர்களுக்கான கொடுப்பனவுகளும் நாளை முதல் நடைமுறைக்கு வருகிறது.
இந்த கொடுப்பனவுகளுக்கு அரசாங்கம் ரூ .40,000 மில்லியனை ஒதுக்கியுள்ளது.
அத்துடன் 2015 டிசம்பர் 31 ஆம் திகதிக்கு முன்னர் ஓய்வு பெற்ற 500,000 அரச ஊழியர்களின் ஓய்வூதியத்தை அதிகரிக்க ரூ .12,000 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை சிறப்புத் தேவைகள் உடையோருக்கான ரூ .2000 கொடுப்பனவு ரூ .5000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. நீண்டகால சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட 5000 நோயாளிகளுக்கு ரூ.5000 வழங்கப்பட உள்ளது என்றும் குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்து தெரிவிக்க