உள்நாட்டு செய்திகள்புதியவை

குற்றவாளிகளுக்கு மக்கள் தேர்தலில் பதிலடி வழங்குவர்: ரணில்

போர்க்குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாகியவர்கள் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டால் தோல்வியினையே  சந்திப்பர் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

“நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சி தனித்து நின்றே போட்டியிடவுள்ளது.

அத்ததுடன் வேட்பாளர் தெரிவில் ஐக்கிய தேசியக் கட்சிக்குள் குழப்பம் என்பது பொய்யான செய்திகளாகும்.

ஜனாதிபதித் தேர்தல் அறிவிப்பு வெளியானதும் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் பெயரை உரிய நேரத்தில் அறிவிப்போம்.

அந்தவகையில் எதிரணியில்தான் வேட்பாளர் தெரிவு தொடர்பில் குழப்பம் ஏற்பட்டுள்ளதோடு குடும்ப ஆட்சியை கொண்டு வர சிலர் முயற்சிக்கின்றனர்.

மக்கள் இதற்கு தக்க பதிலடி வழங்குவர் ரணில் தெரிவித்துள்ளார்.

கூட்டு எதிராணியினரின் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் கோதபய மீது சித்திரவதை உள்ளிட்ட போர் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.

இது தொடர்பில் பாதிக்கப்பட்டவர்களால்
கலிபோர்னியா நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க