இயக்குனர் விஜய் தனது இரண்டாவது திருமணம் தொடர்பிலான செய்தியை வெளியிட்டுள்ளார்.
அமலா பால் உடனான திருமண வாழ்க்கை, விவாகரத்தில் முடிந்த நிலையில், விரைவில், வைத்தியர். ஐஸ்வர்யாவை கரம்பிடிக்க இருப்பதாக அவர் அறிவித்துள்ளார்.
ஊடகவியலாளர்களை தன குடும்பத்தினர் என விழித்துள்ள இயக்குனர் விஜய் ,என்னுடைய வாழ்க்கையின் தனிப்பட்ட விடயங்களை இனியிமையான முறையில் அணுகியுள்ளீர்கள். தற்போது என் வாழ்க்கையின் தொடக்கத்தை பற்றிய மகிழ்ச்சியான செய்தியை பகிர வேண்டியதன் அவசியத்தி உணர்கிறேன்.
வைத்தயர் ஐஸ்வர்யாவுடன் எனது திருமணத்தை அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறன் என் குறிப்பிட்டுள்ளார்.
இவர்களது திருமணம் எதிர் வரும் ஜூலை 11ஆம் திகதி நடைபெறவுள்ளது
‘கிரீடம்’ படத்தை அடுத்து ‘பொய் சொல்லப் போறோம்’, ‘மதராச பட்டினம்’, ‘தெய்வ திருமகள்’, ‘தலைவா’, ‘சைவம்’, ‘தேவி’ உட்பட பல படங்களை விஜய் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து தெரிவிக்க