குருணாகல் போதனா வைத்தியசாலையின் மகப்பேற்று வைத்தியர் சேகு சிஹாப்தீன் ஷாபியை பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தொடர்ந்தும் தடுத்து வைக்க முடியாது என குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றில் அறிவித்துள்ளது.
அத்துடன் அது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சுக்கு அறிக்கை சமர்ப்பிக்க குற்றப்புலனாய்வுத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
குருணாகல் போதனா வைத்தியசாலையில் சேவையாற்றிய வைத்தியர் ஷாபி, கடந்த மே மாதம் 24ஆம் திகதி இரவு மூன்று குற்றச்சாட்டுக்களின் கீழ் கைதுசெய்யப்பட்டார்.
பயங்கரவாதக் குழுவிடம் பணம் பெற்றமை அதன் மூலம் சொத்துக்களை கொள்வனவு செய்தமை, உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் அவர் கைதுசெய்யப்பட்டார்.
அவர் தொடர்ந்தும் குற்றப் புலனாய்வு பிரிவின் பொறுப்பில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், விசாரணையின் அறிக்கை அடுத்த மாதம் 11ஆம் திகதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
பயங்கரவாத நடவடிக்கையுடன் தொடர்புடையதாகத் தெரியவரவில்லை என வைத்தியர் தொடர்பிலான சி பி ஐயின் ‘பி’ அறிக்கை வெளியிடப்பட்டது.
அத்துடன் கருத்தடை சத்திர சிகிச்சை செய்தார் என்ற குற்றச்சாட்டுக்கும் போதிய ஆதாரம் இல்லை என குறிப்பிடப்பட்டது.
இந்நிலையில் தொடர்ந்தும் வைத்தியரை தடுத்து வைக்க முடியாது என குற்றப் புலனாய்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது.
கருத்து தெரிவிக்க