போதைப் பொருள் கடத்தல் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள மாகந்துர மதுஷ் தான் தொடர்பு வைத்துள்ள ஏழு அரசியல்வாதிகளின் விபரங்களை அம்பலப்படுத்தியுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்
மாகந்துர மதுஷ் தொடர்பு வைத்துள்ள அரசியல்வாதிகளில் ஆளும் கட்சியைச் சேர்ந்த நால்வரும் எதிர்க்கட்சியை சேர்ந்த மூவரும் அடங்குவதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர்களது தகவல்களை உலகக்கிண்ண கிரிக்கெட் முடிந்த பின்னர் வெளியிட உள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
மாகந்துர மதுஷ் போதைப் பொருள் கடத்தல் தொடர்பில் கைது செய்யப்பட்டு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறார்.
கருத்து தெரிவிக்க