உள்நாட்டு செய்திகள்கிழக்கு செய்திகள்புதியவை

ஏறாவூர் பற்று கல்விக் கோட்ட அபிவிருத்தி கூட்டம்

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தின் ஏறாவூர் பற்று கல்விக் கோட்டத்தின், கல்வி நிலைமை தொடர்பான கூட்டம் நேற்று இடம்பெற்றது.

இதில் கல்வி நிலைமை தொடர்பான சூழ்நிலைப் பகுப்பாய்வும் கல்வி அபிவிருத்தி திட்டமிடல் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

மட்டக்களப்பு மேற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் சிவானந்தம் சிறீதரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதிக் கல்விப் பணிப்பாளர் க.ஹரிகரராஜ், ஏறாவூர் பற்று பிரதேச சபை தவிசாளர், மாவட்ட சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள், ஏறாவூர் பற்று கோட்டத்தைச் சேர்ந்த பாடசாலை அதிபர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள் பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

இக்கோட்டத்தில் 40 ஆசிரியர்கள் பற்றாக்குறையாக உள்ளது எனவும் ஆசிரியர் பற்றாக்குறை காரணமாகவே இக்கோட்டத்திலும் வலயத்திலும் கல்வி மட்டம் குறைந்த நிலைக்கு காரணம் எனவும் வலயக் கல்விப் பணிப்பாளர் சிறீதரன் கூறியுள்ளார்.

நாம் எதிர்காலத்தில் இவ்வலயத்திலுள்ள மாணவர்களின் கல்வி மட்டத்தினை உயர்த்துவதற்காக சிறந்த வளவாளர்களை பெற்று வகுப்புக்களை நடத்த திட்டமிட்டுள்ளோம்.

இதற்கு உதவுவதற்கு சமூக நலன் சார்ந்த அமைப்புக்கள் முன்வரவேண்டும் எனவும் வலயக்கல்விப் பணிப்பாளர் இதன் போது தெரிவித்தார்

கருத்து தெரிவிக்க