புதியவைவெளிநாட்டு செய்திகள்

அமெரிக்க, வடகொரிய தலைவர்கள் தென்கொரியாவில் சந்திப்பு

வடகொரியா தலைவர் கிம் ஜோங் உன் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இருவரும் சந்தித்த நிலையில் கைகுலுக்கி கொண்டுள்ளனர்.

ஜப்பானின் ஒசாகாவில் இடம்பெற்ற ஜி 20 மாநாட்டை தொடர்ந்து அமெரிக்க ஜனாதிபதி கொரியாவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.

இந்நிலையில் தான் வடகொரிய தலைவர் கிம்மை சந்திக்க விரும்புவதாக அவர் தமது ட்விட்டரில் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் கொரிய தீபகற்பங்களை பிரிக்கும் இராணுவ படைகள் நீக்கப்பட்ட அடையாள பகுதியாக திகழும் பன்முன்ஜோம் என்ற இடத்தில் இருவரும் சந்தித்து கொண்டுள்ளனர்.

தம்மை சந்திக்க வந்தமை தொடர்பில் மிகவும் மகிழ்வதாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் இதன் போது வடகொரிய தலைவரிடம் கூறியுள்ளார்.

இரு நாட்டு தலைவர்களின் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்தும் இடம்பெறுவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

கருத்து தெரிவிக்க