ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பதுளை மாவட்ட தலைவர் பதவில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கமவை நீக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பதுளையில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் இது குறித்து பிரேரணை ஒன்று முன்வைக்க தீர்மானிக்கப்பட்டது.
இதனையடுத்து, ஹலி-எலா மற்றும் பண்டாரவெள பிரதேச சபைகளின் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களால் பிரேரணை ஒன்று கொண்டுவரப்பட்டது.
இந்தப் பிரேரணை ஊவா மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பொதுஜன பெரமுனவின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களால் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷ ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக களமிறக்கப்பட்டால் அவருகு ஆதரவு வழங்க முடியாது என குமார வெல்கம தெரிவித்தமைக்கு எதிராகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கருத்து தெரிவிக்க