உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்புதியவை

நாட்டு மக்களால் மட்டுமே போதைப் பொருளை அழிக்கமுடியும்

போதைப் பொருள் தொடர்பாக எத்தகைய தகவல்களையும் தொலைபேசி இலக்கங்களின் ஊடாக வழங்க முடியும் என்று அபாயகர மருந்து கட்டுப்பாட்டு தேசிய சபையின் பணிப்பாளர் திருமதி குமுதினி ஜயதிலக்க தெரிவித்துள்ளார்.

போதையற்ற நாடு என்ற வேலைத்திட்டம் பல மாகாணங்களில் நடைபெறுகின்ற நிலையில் இறுதிக் கட்டம் மேல் மாகாணத்தை கேந்திரமாகக் கொண்டு அடுத்த மாதம் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

போதைப் பொருள் பாவனையில் ஈடுபட்டவருக்கு வழங்கப்படும் சிகிச்சைக்கு மேலதிகமாக அவர்களுக்கு புனர்வாழ்வு அளிப்பது தொடர்பிலும் கவனம் செலுத்தப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மத்திய மாகாண பிரதி பொலிஸ்மா அதிபர் ரஜீவ மெதவத்த கருத்து தெரிவிக்கையில், சட்டவிதிகள் முறையாக முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

போதைப் பொருள் கடத்தல் காரர்களுக்கு எதிராக சட்டத்தை ஆகக்கூடிய வகையில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்து தெரிவிக்க