அநுராதபுரம் விலாச்சிய பகுதியில் கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடைய 15 வயது சிறுவன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சிறுவன் முன்னர் ஆடுகளுக்கு விஷம் கொடுத்து கொலை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அநுராதபுரம், தந்திரிமலைப் பகுதியில் 13 ஆடுகளுக்கு விஷம் வைத்து கொலை செய்த குற்றச்சாட்டில் குறித்த சிறுவனின் தந்தையான சிவில் பாதுகாப்பு படை உறுப்பினரும் சிறுவனும் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இவர்கள் இருவரிடமும் விசாரணைகள் இடம்பெற்று வந்த நிலையில், சிறுவன் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கருத்து தெரிவிக்க