தெறி மற்றும் மெர்சல் படங்களைத் தொடர்ந்து பிகில் படத்தை இயக்குகின்றார் அட்லீ. இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்புக்கள் நடைபெற்று வரும் நிலையில் தீபாவளிக்கு இத்திரைப்படம் வெளிவர இருக்கிறது.
இந்நிலையில், இந்த படத்தில் ஹிந்தி நடிகரான ஷாருக்கான் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி விஜய்யின் பிகில் படத்தை தொடர்ந்து ஷாருக்கானை வைத்து தமிழ் மற்றும் ஹிந்தியில் ஒரு படத்தை அட்லீ இயக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியன் பிரிமீயர் லீக் 20-20 கிரிக்கெட்டின் போது சென்னை வந்திருந்த ஷாருக்கானை அட்லீ சந்தித்து பேசியதாகவும் அப்போதே அவரிடம் ஒரு கதையை கூறி ஓகே வாங்கி விட்டதாகவும் தகவல் கசிந்துள்ளது. மேலும், இப்படம் ரஜினிக்காக உருவாக்கிய கதை எனவும், அவரிடமிருந்து சரியான பதில் கிடைக்காத காரணத்தினாலேயே அதைச் ஷாருக்கானிடம் கூறியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
கருத்து தெரிவிக்க