சாட்சிமளிக்க முன்னிலையாகாதவர்களுக்கு எதிராக உயர்நீதிமன்றில் விளக்கமளிக்கவுள்ளதாக நாடாளுமன்ற விஷேட தெரிவுக்குழு கூறியுள்ளது.
கடந்த ஈஸ்டர் தினத்தில் நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஆராய நாடாளுமன்ற விஷேட தெரிவுக்குழு அமைக்கப்பட்டது.
இந்தக் குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்படும் எந்தவொரு தரப்பினரும் அறிவித்தலை ஏற்று முன்னிலையாக வேண்டும்.
அத்துடன், அழைப்பு விடுக்கும் தினத்தில் முன்னிலையாக முடியாதவர்கள், அதற்காக வேறு ஒரு தினத்தை ஒதுக்கி கொள்ள முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சாட்சி வழங்கல்கள் நிறைவடைந்தவுடன் இறுதி அறிக்கையை தயாரிக்கவுள்ளதாக நாடாளுமன்ற விஷேட தெரிவுக்குழு குறிப்பிட்டுள்ளது.
கருத்து தெரிவிக்க