உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

(SOFA)உடன்படிக்கையின்படி அமரிக்க படைகள் ஆயுதங்களுடன் நடமாடமுடியும்

சோபா(SOFA) என்ற அழைக்கப்படும் உத்தேச படைகள் உடன்படிக்கை நகல் தொடர்பில் இலங்கையும் அமரிக்காவும் கலந்துரையாடல்களில் ஈடுபட்டுள்ளன.

இந்த உடன்படிக்கையில் இலங்கையின் இறைமைக்கு பாதிப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்ட கருத்துக்களை அடுத்தே கலந்துரையாடல்கள் இடம்பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உடன்படிக்கையின்படி அமரிக்காவின் வானூர்திகள் மற்றும் கப்பல்கள் இலங்கைக்கு சுதந்திரமாக வந்துசெல்லமுடியும்.

அத்துடன் இலங்கையில் அமரிக்காவுக்கு சுங்கத்தீர்வைகள். வரிகள் மற்றும் ஏனைய கட்டணங்களில் இருந்து விலக்களிக்கப்படும்.

அத்துடன் இலங்கையில் அமரிக்க துருப்புக்கள் சீருடைகளுடனும் ஆயுதங்களுடனும் நடமாடும் அதிகாரத்தையும் இந்த உடன்படிக்கையின் மூலம் அமரிக்கா எதிர்பார்க்கிறது.

இதனை தவிர அமரிக்க படையினர் இலங்கைக்கு வருவதற்கும் திரும்பி செல்வதற்கும் கடவுச்சீட்டுக்களோ வீசாக்களோ அவசியம் இல்லை.

இந்தநிலையில் இந்த உடன்படிக்கைக்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன கடும் எதிர்ப்பை வெளியிட்டு வருகிறார்.

கருத்து தெரிவிக்க