இந்தியா

தனியார் ஜெட் சார்ட்டட் விமானங்களும் இனிப் பறக்கலாம்… மத்திய அரசின் க்றீன் சிக்னல்

டெல்லி தனியார் ஜெட் விமானங்கள், சார்ட்டட் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களை உள்நாட்டு வழித்தடங்களில் மீண்டும் செயல்பட சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் அனுமதித்துள்ளது.
பயணிகள் எப்போது போர்டிங் செய்ய வேண்டும் என்பதற்கான புதிய வழிகாட்டுதல்களை வெளியிடப்பட்டுள்ளன. இந்த உத்தரவு ஜெட் மற்றும் மைக்ரோ லைட் விமானங்கள் போன்ற விமானங்களுக்கும் பொருந்தும்.
வழிகாட்டுதல் நெறிமுறைகளின்படி, பயணிகள் புறப்படுவதற்கு குறைந்தபட்சம் 45 நிமிடங்களுக்கு முன்னதாக விமான நிலையம், ஹெலிபோர்ட் அல்லது ஹெலிபேடில் ரிப்போர்ட் செய்ய வேண்டும். மிகவும் வயதானவர்கள், கர்ப்பிணிப் பெண்கள், உடல்நலப் பிரச்சினைகள் உள்ள பயணிகள் போன்ற பாதிப்புக்குள்ளானவர்கள் விமானப் பயணத்தைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இருப்பினும், இது விமான ஆம்புலன்ஸ் சேவைகளுக்கு பொருந்தாது. சார்ட்டட் விமான பயணிக்கான போர்டிங் பாஸ், ஹெலிபேட் அல்லது ஹெலிபோர்ட்டில் வழங்கப்படும். பரிந்துரைக்கப்பட்ட அனைத்து சுத்திகரிப்பு நெறிமுறைகளையும் அவர் பின்பற்ற வேண்டும்.
உள்நாட்டு பயணிகள் விமானங்களுக்கு சிவில் ஏவியேஷன் டைரக்டர் ஜெனரல் கடந்த வாரம் பிறப்பித்த கட்டண உச்சவரம்பு சார்ட்டட் விமானங்களுக்கு, பொருந்தாது என்று வழிகாட்டுதல்கள் கூறுகின்றன.

விமான பயணங்களுக்கான கட்டணங்கள் (சார்ட்டட் விமானங்களில்) ஆபரேட்டர்கள் மற்றும் பயணிகளுக்கு இடையே பரஸ்பரம் ஒப்புக் கொள்ளப்பட்ட விதிமுறைகளின்படி இருக்க வேண்டும் என அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க