வெளிநாட்டு செய்திகள்

வர்த்தக பேச்சுவார்த்தையை தொடர சீனா, அமெரிக்கா ஒப்புதல்

வர்த்தக பேச்சுவார்த்தையை மீண்டும் தொடர அமெரிக்காவும் சீனாவும் இணங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே வர்த்தக போர் பேச்சுவார்த்தை உடன்பாடின்றி முடிந்த நிலையில் சீனாவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு அமெரிக்கா மீண்டும் கூடுதல் வரியை விதித்தது. சீனாவும் பதிலுக்கு வரியை அதிகரித்தது.

இதைத்தொடர்ந்து வர்த்தக பேச்சுவார்த்தை தோல்வியடையும் என எதிர்பார்ப்பட்ட நிலையில் மீண்டும் பச்சை கொடி காட்டப்பட்டுள்ளது.

ஜி 20 மாநாட்டுக்கு இடையே இரு நாட்டு தலைவர்களும் சந்தித்துக்கொண்டனர்.

இதையடுத்து சீன செய்தி நிறுவனம் தமது செய்தியில், “சீனாவும், அமெரிக்காவும் மீண்டும் வர்த்தக பேச்சுவார்த்தையை தொடர இணங்கியுள்ளது என குறிப்பிட்டுள்ளது.

சமத்துவம் மற்றும் பரஸ்பர மரியாதை அடிப்படையில் இரு நாடுகளும் இந்த பேச்சுவார்த்தையை தொடரும்.

சீனாவின் ஏற்றுமதி பொருட்களுக்கு புதிய வரிகள் விதிக்கப்படாது என அமெரிக்கா தெரிவித்துள்ளது” என மேலும் தெரிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க