இலங்கை இராணுவ உயர்மட்ட அதிகாரிகளின் பதவிகளில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இதன்படி, மேஜர் ஜெனரல் சத்யபிரிய லியனகே இராணுவ தொண்டர் படைகளின் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
பாதுகாப்பு அமைச்சில், மத தீவிரவாதம், வன்முறை அடிப்படைவாதம், தீவிரவாதத்தை தடுக்கும் மற்றும் முறியடிக்கும் தேசிய திட்டத்தின் தலைவராக யாழ். படைகளின் தலைமையக தளபதியாக இருந்த மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி நியமிக்கப்பட்டுள்ளார்.
அத்துடன் இராணுவ பிரதி தலைமை அதிகாரியாக மேஜர் ஜெனரல் குமுது பெரேராவும், யாழ். படைகளின் தலைமையக தளபதியாக 59ஆவது டிவிசனின் கட்டளை அதிகாரியான மேஜர் ஜெனரல் ருவன் வணிகசூரியவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இராணுவத் தலைமையகத்தில் ஆயுத தளபாடப் பிரிவின் மாஸ்டர் ஜெனரலாக இருந்த மேஜர் ஜெனரல் ஜெகத் குணவர்த்தன, வன்னிப் படைகளின் தலைமையக தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும், 24 ஆவது டிவிசனின் கட்டளை அதிகாரியாக இருக்கும் மேஜர் ஜெனரல் மகிந்த முதலிகே, மேற்கு படைகளின் தலைமையக தளபதியாக நியமனம் பெற்றுள்ளார்.
முதன்மை கள பொறியாளராக இருந்த மேஜர் ஜெனரல் ஆர்.கே.பி. பீரிஸ் இராணுவ தலைமையக ஆயுத தளபாடப் பிரிவின் மாஸ்டர் ஜெனரலாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
11 ஆவது டிவிசனின் கட்டளை அதிகாரியாகப் பணியாற்றிய மேஜர் ஜெனரல் திஸ்ஸ நாணயக்கார இராணுவத் தலைமையகத்தின் முதன்மை கள பொறியாளராகவும் 54 ஆவது டிவிசன் கட்டளை அதிகாரியான மேஜர் ஜெனரல் சேனாரத் பண்டார, 11 ஆவது டிவிசனின் கட்டளை அதிகாரியாக மாற்றப்பட்டுள்ளார்.
கருத்து தெரிவிக்க