விளையாட்டு செய்திகள்

நீல நிற டீ ஷர்ட் அணிந்து விளையாடுவதே பெருமை – விராட் கோலி

நீல நிற டீ ஷர்ட் அணிந்து விளையாடுவதையே பெருமையாக கருதுகிறோம் என இந்திய அணி தலைவர் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்தில் இடம்பெறும் உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில், எல்லா அணிகளும் மாற்று டீ ஷர்ட் அறிவித்து, அதை ஒரே நிற டீ ஷர்ட்டில் போட்டியிடும் அணிகளுக்கு எதிரான போட்டியில் அணியாரு கேட்க்கப்பட்டுள்ளது.

அதில் தொடரை நடத்தும் நாடு என்ற அடிப்படையில் இங்கிலாந்து அணிக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே எதிர்வரும் 30-ம் திகதி இந்திய அணி, இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் ஆரஞ்சு நிற டீ ஷர்ட் அணிந்து பங்கேற்பதாக அறிவிப்பு வெளியானது.

இந்நிலையில், இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி பங்கேற்க உள்ள ஆட்டத்திற்கான ஆரஞ்சு நிற டீஷர்ட் அதிகாரப்பூர்வமாக நேற்று வெளியிடப்பட்டது.

இந்நிலையிலேயே கோலி நீல நிற டீ ஷர்ட் அணிந்து விளையாடுவதே பெருமை என குறிப்பிட்டுள்ளார்.

கருத்து தெரிவிக்க