உலகம்

அமெரிக்காவுடன் பேச்சு வார்த்தை நடத்த தேவையில்லை : கிம் யோ ஜோங்

அமெரிக்காவின் வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ , அணுசக்தி சோதனை தொடர்பாக விரைவில் வடகொரியாவுடன் பேச்சு வார்த்தை நடத்த வாய்ப்பு இருப்பதாக தெரிவித்திருந்தார். இந்நிலையில், வடகொரிய ஜனாதிபதியின் தங்கை கிம் ஜோ ஜோங் , அமெரிக்காவுடன் மீண்டும் ஒரு பேச்சு வார்த்தை நடத்த அவசியம் இல்லை எனவும், ஒரு வேளை நடத்தப்பட்டால் அது ஒரு தரப்பின் பெருமைக்காக மட்டுமே இருக்கும் எனவும், அமெரிக்காவை பயமுறுத்தும் எண்ணம் தங்கள் நாட்டுக்கு இல்லை என்றும் பதிலளித்திருந்தார்.

மேலும் இந்த வருடம் ஜனாதிபதி கிம் ஜோங் உன் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பிற்கு இடையே மேலும் ஒரு சந்திப்பு இடம்பெற வாய்ப்பில்லை.
பேச்சு வார்த்தைக்கு வாய்ப்பில்லை என்பதால் அணுசக்தி மயமாக்கல் சாத்தியமில்லை என்று அர்த்தம் இல்லை. இந்த நேரத்தில் அது நடக்க வாய்ப்பில்லை என்பதைத்தான் தெளிவுபடுத்த விரும்புகின்றோம்.

அமெரிக்காவை பயமுறுத்தும் சிறிய நோக்கம் கூட எங்களுக்கு இல்லை. அவர்கள் எங்களை தனியாக விட்டு விட்டு , எந்த வித தொந்தரவும் தராவிட்டால் எல்லாம் சீராக நடக்கும். ட்ரம்ப்பிடம் இருந்தும், அவரது உதவியாளர்களிடம் இருந்தும், தொடர்ச்சியான மோதல்கள், அழுத்தங்கள் போன்றவற்றின் கலவையான செய்திகள் வேண்டுமென்றே திட்டமிடப்பட்டதா? அல்லது ஜனாதிபதியின் அதிகாரப் பிடியின் விளைவாகவா? என்பது தெளிவாக தெரியவில்லை.

ட்ரம்பிற்கு அவரது சேவைகள் தொடர்பாக வாழ்த்து செய்திகளை அனுப்ப எனது சகோதரர் அறிவுறுத்தினார். ஜனாதிபதிகளுக்கிடையிலான நல்லுறவு இருந்தாலும் , அமெரிக்கா விரோதப் போக்கிற்கு திரும்பும். ட்ரம்பைத் தவிர வேறு நாட்டு ஜன்திபதிகளுக்கான தனது கொள்கைகளை வடகொரியா வடிவமைக்க வேண்டும் என கிம் ஜோ ஜோங் கூறினார்.

  • வடகொரியா ஜனாதிபதியின் தங்கை யான கிம் ஜோ ஜோங் , அந்நாட்டின் அதிகாரம் படைத்த அமைப்பான வடகொரிய தொழிலாளர் கட்சியின் மத்திய குழு உறுப்பினராகவும், முக்கியமான சக்தி வாய்ந்த நபராகவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது‌.

கருத்து தெரிவிக்க