இந்தியா

ஐநாவே வியந்தது! 1590 ஏக்கரில் ஆசியாவிலேயே பெரிய சோலார் மின்நிலையம்; திறந்து வைத்த பிரதமர் மோடி!

போபால்: ஆசியாவிலேயே மிகப்பெரிய சூரிய மின்சக்தி நிலையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். உலகம் முழுக்க இது பெரிய பாராட்டை பெற்று இருக்கிறது.

மத்திய பிரதேச மாநிலம் ரேவா மாவட்டத்தில் இந்த சூரிய மின்சக்தி நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது. இன்று காலை இதை பிரதமர் மோடி வீடியோ மூலம் திறந்து வைத்தார்.
சோலார் பேனல்கள் அமைக்கப்பட்டு, சூரிய ஒளி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்ய கூடிய சூரிய மின் உற்பத்தி மையம் ஆகும் இது. பிரதமர் மோடி இதை இன்று நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

இந்த சோலார் மின்நிலையம் போபால் அருகே ரேவா மாவட்டத்தில் உள்ளது. இதன் மூலம் 15 லட்சம் டன் கார்பன் டை ஆக்சைட் வெளியாவது கட்டுப்படுத்தப்படும். எல்லா வருடமும் இவ்வளவு கார்பன் டை ஆக்சைட் வெளியிடுவது தடுக்கப்படும். இதன் மூலம் 750 மெகாவாட் மின்சாரம் தயாரிக்க முடியும். இது தடையின்றி இயங்கும்.

மொத்தமும் 1590 ஏக்கர் நிலப்பரப்பில் இந்த சோலார் மின்நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சோலார் மின்நிலையம் உலகம் முழுமைக்கும் எடுத்துக்காட்டாக இருக்கும். எந்த செலவும் இன்றி தினமும் சூரிய ஒளி மூலம் இதனால் மின்சாரத்தை தயாரிக்க முடியும். மாநில அரசுகளுக்கு இதன் மூலம் மின்சாரம் பகிர்ந்து அளிக்கப்படும்.

உலகில் இருக்கும் பெரிய சோலார் மின்நிலையங்களில் இதுவும் ஒன்று. ஆசியாவிலேயே இதுதான் பெரிய சோலார் மின்நிலையம் ஆகும். மொத்தம் ஒவ்வொரு 500 ஏக்கர் பரப்பு சோலார் பேனல் பகுதிகளில் 250மெகாவாட் மின்சாரத்தை தயாரிக்கும். மொத்தமாக 750-800 மெகாவாட் மின்சாரத்தை இது உருவாக்கும். மத்திய பிரதேசத்தை சேர்ந்த உர்சா விகாஸ் நிகம் லிமிட்டட் நிறுவனம் அரசுடன் இணைந்து இந்த திட்டத்தை செயல்படுத்தி உள்ளது.

அரசு சார்பாக சோலார் மின்நிலையம் அமைக்க வெறும் 138 கோடி மட்டுமே செலவு செய்யப்பட்டது. இதை வரும் நாட்களில் விரிவுபடுத்தவும் இருக்கிறார்கள். இதில் 76% மின்சாரம் மாநில அரசுக்கு செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது. இதை 2022க்குள் மொத்தமாக விரிவுபடுத்த திட்டமிட்டு இருக்கிறார்கள். இந்த திட்டம் பெரிய அளவில் பாராட்டுகளை பெற்றுள்ளது.

இதை தற்போது ஐநாவே பாராட்டி உள்ளது. ஐநா தலைவர் ஆண்டனியோ குட்டெரஸ் இதில் தெரிவித்துள்ள கருத்தின்படி , இந்தியாவின் இந்த திட்டத்தை வரவேற்கிறோம். இந்தியா தற்போது மற்ற உலக நாடுகளுக்கு எடுத்துக்காட்டாக மாறியுள்ளது. வரும் காலத்தில் உலகில் பாதுகாப்பான மின்சாரத்தை இப்படித்தான் உருவாக்க முடியும், என்று கூறியுள்ளார்.

கருத்து தெரிவிக்க