வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் முழுமையாக நாட்டிற்கு அழைத்துவரும் பணிகள் முடிந்த பின்னரே பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் மீண்டும் திறப்பது தொடர்பில் பரிசீலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிவில் விமான சேவைகள் பணிப்பாளர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிரி ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு நேற்று இதை தெரிவித்தார்.
கொரோனா அச்சத்தால் வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களை முழுமையாக நாட்டிற்கு அழைத்துவர வேண்டும். இந்த பணியை முடிக்க குறைந்தபட்சம் மூன்று வாரங்கள் ஆகும் என்றும் கூறினார்
எனினும் சூழ்நிலைகளைப் பொறுத்து அதைவிட அதிக காலம் ஆகக்கூடும். “திருப்பி அழைக்கும் செயல்முறை முடிந்த பின்னரே, விமான நிலையத்தை மீண்டும் திறப்பதை அரசாங்கம் பரிசீலிக்கும்” என்று அவர் கூறினார்.
முன்னதாக ஆகஸ்ட் மாதம் 1ஆம் திகதி விமான நிலையம் திறக்கப்படும் என்றும், பின்னர் 15ஆம் திகதி திறக்கப்படும் என்றும் கூறப்பட்டது. இந்த நிலையில் குறித்த திகதி மீண்டும் தள்ளிப்போயுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து தெரிவிக்க