சினிமா

விரைவில் வருகிறது சூர்யாவின் ‘காப்பான்’

மோகன்லால்,சூர்யா, ஆர்யா, சாயிஷா, பொமன் இராணி, பிரேம், பூர்ணா, சமுத்திரக்கனி ஆகியோர் நடித்துள்ள காப்பான் திரைப்படம் ஆகஸ்ட் மாதம் வெளிவரவுள்ளது.

தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகும் இந்த படத்தில் தெலுங்கு பெயர் ‘பந்தோபஸ்த்’ என இயக்குனர் ராஜமௌலி நேற்று அறிவித்துள்ளார்.

இதில் சூர்யா கமாண்டோ அதிகாரியாக நடித்துள்ளார். மோகன்லால் பிரதமர் வேடத்தில் நடித்து இருப்பதாக கூறப்படுகிறது. அதிரடி சண்டை காட்சிகளுடன் இந்த படம் தயாராகி உள்ளது.

இந்த படத்தை கே.வி.ஆனந்த் இயக்கி உள்ளார். இவர்கள் கூட்டணியில் அயன், மாற்றான் ஆகிய படங்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க