சினிமா

அஜித்தின் ‘நேர்கொண்ட பார்வை’பட பாடல் வெளியானது

அஜித்தின் ‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் ‘வானில் இருள்’ என்ற பாடல் வரிகளின் காணொளியை படக்குழுவினர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டனர்.

யுவன் சங்கர்ராஜா இசையில் உமாதேவி எழுதிய இந்த பாடலை தீ பாடி உள்ளார். பாடல் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

நேர்கொண்ட பார்வை படத்தை ஓகஸ்ட் 10-ஆம் திகதி வெளியிட திட்டமிட்டனர். ஆனால் தெலுங்கில் பெரிய செலவில் தயாராகி உள்ள பிரபாஸ் நடித்த சாஹோ படம் ஓகஸ்ட் 15-ஆம் திகதி தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியாகிறது.

இதே நாளில் சுதிப் நடித்த ‘பயில்வான்’ படத்தையும் இரு மொழிகளிலும் வெளியிடுகிறார்கள்.

இதனால் ஓகஸ்ட் முதலாம் திகதி நேர்கொண்ட பார்வை படத்தை திரைக்கு கொண்டுவருவது குறித்து படக்குழுவினர் ஆலோசித்து வருகிறார்கள்.

கருத்து தெரிவிக்க