வெளிநாட்டு செய்திகள்

ஜி 20 உச்சி மாநாடு தொடங்கியது :

ஜப்பானின் ஒசாகா நகரில் ஜி 20 நாடுகளின் உச்சி மாநாடு இன்று ஆரம்பித்தது. இரு நாட்கள் நடைபெறும் இம்மாநாட்டில் , ஜி 20 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.

இன்று வரவேற்பு நிகழ்வுடன் உச்சி மாநாடு ஆரம்பமானது. ஜப்பான் பிரதமர் , ஷின்சோ அபே நாடுகளின் தலைவர்களை வரவேற்று மேடைக்கு அழைத்தார். மாநாட்டின் முதல் அமர்வில் ஒவ்வொருவராக உரையாற்றினர். அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் , ஜி 20 நாடுகளின் தலைவர்கள் வர்த்தகத்திற்கு முதல் முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்றும், சீனாவின் ஜனாதிபதி வர்த்தக பாதுகாப்பு வாதம்  அதிகரித்து வருவதைக்  கண்டித்தும் உரையாற்றினார்கள்.

இதையடுத்து ஜப்பான் பிரதமர் சின்ஷோ அபே, உலகளாவிய வர்த்தகத்தின் தற்போதைய நிலைமை கவலை அளிப்பதாகவும் , தடையற்ற, நியாயமான, பாரபட்சமற்ற வர்த்தகத்தை ஆதரிக்க வேண்டும் என உரையாற்றினார்.

கருத்து தெரிவிக்க