பொது போக்குவரத்து ( தொடரூந்து) சேவையை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
போக்குவரத்து அமைச்சு இதனை அறிவித்துள்ளது.
தொடரூந்து (ரயில்வே) பணியாளர்கள் மேற்கொண்டு வரும் பணிப்புறக்கணிப்பின் மத்தியில் பொதுமக்களுக்கு சிறந்த சேவையை வழங்கவேண்டும் என்பதற்காகவே இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் அறிவுறுத்தலின் பேரில் இன்று ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர் செனவிரத்னவினால் இந்த வர்த்தமானியில் கையெழுத்திடப்பட்டுள்ளது.
அத்தியாவசிய பொது சேவைகள் சட்டத்தின் படி (1979 ஆம் ஆண்டின் எண் 61) இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கருத்து தெரிவிக்க