தெனியாய பிரதேசத்தில் பல பகுதிகளில் நெற் பயிர்செய்கை பாதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகளுக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
நாற்று நட்டு இரண்டரை மாதங்கள் கடந்த நிலையில், பயிர்களுக்கு உரமிட்ட பின்னர் நெற்பயிர் சாயலைக்கொண்ட ஒரு வகையான புல்லியனம் வளர்ந்து, நெற் பயிர் அனைத்தையும் சாகடித்துள்ளது.
இப்புல்லினம் நெற்பயிர் போன்ற சாயலைக் கொண்டிருப்பதனால் அதை இலகுவில் களையெடுக்க முடியாமல் விவசாயிகள் திண்டாடுகின்றனர்.
விவசாய திணைக்களத்தில் இப் பிரச்சனை தொடர்பில் அறிவித்தபின்னர் அவர்கள் இதற்கு தீர்வாக பயிர்களை முற்றாக வெட்டுமாறு கூறிவிட்டுசென்றுள்ளனர்.
இது தொடர்பில் மாற்று தீர்வு எதுவும் முன்வைக்கப்படாததால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கருத்து தெரிவிக்க