இலங்கையின் அமரிக்க தூதரகத்தில் வைத்து இலங்கை பெண் ஒருவர் அமரிக்க ராஜதந்திரிகளால் துன்புறுத்தல்களுக்கு உட்படுத்தப்பட்டார் என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அமரிக்க தூதரகத்தின் முன்னாள் பணியாளர் ஒருவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
அமரிக்க தூதுவர் எலைய்னா டெப்லிட்ஸ், வேலைத்தளங்களில் பெண்களின் உரிமைகள் தொடர்பாக வெளியிட்ட டுவிட்டர் செய்தி ஒன்றுக்கு பதில் டுவிட்டர் செய்தியிலேயே தூதரகத்தின் முன்னாள் பணியாளர் தமது குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
அமரிக்க தூதரகத்தில் இலங்கையின் பெண் ஒருவர் சில ராஜதந்திரிகளால் துன்புறுத்தல்களுக்கு உட்படுத்தப்பட்டமையை தடுக்கமுடியாதபோது ஒவ்வொருவருக்கும் நீங்கள் பெண்களின் உரிமைகள் பற்றி கற்பிக்கமுடியாது என்று குறித்த முன்னாள் பணியாளர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் இது தொடர்பில் கருத்துக்கூறமுடியாது என்று அமரிக்க தூதரகத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
வேலைத்தளங்களில் பாலியல் துன்புறுத்தல்களுக்கு எதிராகவே அமரிக்கா குரல் கொடுத்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கருத்து தெரிவிக்க