உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

ஜனாதிபதியின் மகளை நீதிமன்றில் முன்னிலையாக உத்தரவு

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் மகள் சத்துரிக்கா சிறிசேனவை எதிர்வரும் செப்டம்பர் 25ஆம் திகதி மன்றில் முன்னிலையாகுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

ஜனாதிபதியின் மகளுடைய கையொப்பம் அடங்கிய ஆவணம் ஒன்று கடன் எடுப்பதற்காக தனியார் வங்கியில் சமர்ப்பிக்கப்பட்ட சம்பவம் தொடர்பிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ரேணுகா ரண்வெல ஆராச்சி மற்றும் கோசிக்கா விமுக்தி காரியவசம் ஆகிய இரண்டு பேருக்கு கடன் வழங்குமாறு கோரி இந்த ஆவணம் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.

ஏற்கனவே இது தொடர்பில் ஜனாதிபதியின் மகளுக்கு அறிவித்தல் அனுப்பப்பட்டபோதும் அவர் மன்றில் முன்னிலையாகவில்லை.

இந்தநிலையில் சத்துரிக்காவிடம் கிடைக்கும் வண்ணம் நீதிமன்ற அறிவித்தலை சமர்ப்பிக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

கருத்து தெரிவிக்க