சினிமா

ஹிந்தி பிக்பொஸ்ஸில் அதிக சம்பளத்துடன் சல்மான் ஒப்பந்தம்

ஹிந்தியில் பிக்பொஸ் 13-வது சீசன் வருகிற செப்டம்பர் 29- ஆம் திகதி தொடங்குகிறது. இதனை தொகுத்து வழங்க நடிகர் சல்மான்கானை ஒப்பந்தம் செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதற்காக அவருக்கு பெரிய தொகையை சம்பளமாக பேசி உள்ளனர்.

சனி, ஞாயிற்றுக்கிழமைகள் தோறும் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. இதன் படி ஒருவாரத்துக்கு சல்மான்கானுக்கு வழங்கப்பட உள்ள சம்பளம் இந்திய மதிப்பில் ரூ.31 கோடி என்று கூறப்படுகிறது.பிக்பொஸ்ஸில் ஒரு சீசனில் மொத்தம் 26 ‘நிகழ்ச்சிகள்’ உள்ளன.

இவற்றுக்கு சல்மான்கான் வாங்கும் மொத்த சம்பளம் ரூ.403 கோடி ஆகும்.

ஹிந்தியில் ஒரு படத்தில் நடிக்க சல்மான்கான் ரூ.40 கோடியில் இருந்து ரூ.50 கோடி வரை சம்பளம் பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க