உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்புதியவை

மனித உரிமைகள் பேரவையில் இலங்கை விளக்கம்

மனித உரிமை விடயங்கள் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் பேரவையில் நேற்று விளக்கமளித்தது.

தேசிய பாதுகாப்பு உட்பட்ட நல்லிணக்க முயற்சிகள் தொடர்பில் இதன்போது இலங்கையின் குழு கருத்துக்களை வெளியிட்டது.

பேரவை அமர்வை ஆரம்பித்து வைத்து உரையாற்றியிருந்த ஆணையாளர் மிச்செய்ல் பெச்சலெட் இலங்கையின் மனித உரிமைகள் மற்றும் ஜனாதிபதிக்கும் அரசாங்கத்துக்கும் இடையிலான முறுகல் காரணமாக பொதுமக்களின் பாதுகாப்புக்கு பிரச்சனை என்ற விடயங்களை சுட்டிக்காட்டியிருந்தார்.

இந்தநிலையில் நேற்று தமது கருத்தை வெளியிட்ட இலங்கையின் குழு, வன்முறைகள் மற்றும் தீவிரவாதத்துக்கு எதிராக அரசாங்கம் செயற்திட்டங்களை முன்னெடுப்பதாக கூறியது.

முதன்முறையாக ஐஎஸ்ஐஎஸ் தாக்குதல்களை எதிர்கொண்டமையை அடுத்தே நாட்டில் அவசரக்கால நிலை பிரகடனப்படுத்தப்பட்டதாகவும் இலங்கை குழு சுட்டிக்காட்டியது.

கருத்து தெரிவிக்க