நமது சுற்றாடலை சுற்றி வளர்ந்திருக்கும் அரியதான சில மூலிகைச் செடிகள் பற்றி நமக்கு தெரியாமலேயே போய் விடுகிறது. அவ்வாறு வீட்டின் அருகிலேயே வளர்ந்திருக்கும் ஒரு அரிய வகை மூலிகை செடி குப்பை மேனி. இது ஏராளமான மருத்துவ குணங்கள் உடையது.
குப்பைமேனி இலையை அரைத்து முகத்தில் பூசினால் முகத்தில் உள்ள தேவையற்ற முடிகள், பருக்கள். கரும்புள்ளிகள் போன்றன மறைந்து விடும்.
கரும்புள்ளிகள் மறைவதற்கு இதன் இலையுடன் மஞ்சள் சிறிதளவு, இரண்டு வெள்ளைப்பூடு , சேர்த்து அரைத்து முகத்தில் பூசி வந்தால் கரும்புள்ளிகள் மறையும்.
உடலில் ஏற்படும் சிரங்கு, புண், தோல் நோய் போன்றவற்றுக்கு குப்பை மேனி இலையுடன் உப்பு, மஞ்சள் சேர்த்து அரைத்து பூசலாம்.
இலையுடன் மஞ்சள் சேர்த்து அரைத்து புண், நச்சுக்கடி, தீக்காயங்கள் போன்றவற்றின் மேல் பற்றுப் போல் பூசி வந்தால் குணமாகும்.
குப்பைமேனி இலையை ஆமணக்கு எண்ணெய் விட்டு வதக்கி இளம் சூட்டில் கட்டி வர படுக்கை புண்கள் மாறி விடும்.
இலையை காய வைத்து தூளாக்கி அவித்து குடித்தால் தலைவலி குணமாகும்.
இதன் வேரை நிழலில் காயவைத்து அரைத்து ஒரு கைப்பிடியளவு எடுத்து ஒரு லீற்றர் தண்ணீரில் கொதிக்க வைத்து 200 மில்லி லீற்றராக வந்த பின் குடித்து வந்தால் வயிற்றில் உள்ள புழுக்கள் வெளியேறி விடும். இது மலச்சிக்கலையும் குணமாக்கும்.
இலையை ஆமணக்கு எண்ணெயில் தாளித்து 48 நாட்கள் சாப்பிட்டால் வாய்வு தொல்லை முழுமையாக குணமடையும்.
கருத்து தெரிவிக்க