இங்கிலாந்தின் அடுத்த பிரதமர் யார் என்பது பற்றி வரும் யூலை 23 ஆம் திகதி அதிகார பூர்வமாக அறிவிக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் கூட்டமைப்பில் இருந்து விலகுவதற்கு பாராளுமன்றில் அனுமதி கிடைக்காததால் தெரேசா மே தனது பதவியை ராஜினாமா செய்தார். புதிய பிரதமர் தெரிவு செய்யப்படும் வரை அவர் தற்காலிகமாக பதவியை தொடர்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது. பலர் இங்கிலாந்தின் அடுத்த பிரதமர் ஆகும் ஆசையில் உள்ளனர். தலைவர் யார்? பிரதமர் யார்? என்பது பற்றி வரும் யூலை 23 ஆம் திகதி அதிகார பூர்வமாக வெளியாகும் எனவும், நாட்டின் பிரதமராக அங்கீகரிக்கும் உத்தரவை ராணி பிறப்பிப்பார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்து தெரிவிக்க